இலங்கையின் பிரதான ஆறுகள்




இலங்கையின் ஆறுகள் நாட்டின் மத்திய உயர்நிலத்தில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கின்றன. 1959 ஆண்டு ஆய்வொன்றின் படி இலங்கையில் மொத்தம் 103 ஆறுகள் காணப்படுகின்றன. இவற்றுள் 10 ஆறுகள் முக்கியமானவையாகும். மகாவலி கங்கை மிக நீளமான ஆறாகும். இலங்கையின் முக்கிய ஆறுகளில் கலா ஓயா மாத்திரமே உயர்நிலமல்லாத குளம் ஒன்றில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இலங்கையின் ஆறுகளில் களு ஆறு, களனி ஆறு, ஜின் ஆறு, நில்வல ஆறு, மகாவலி கங்கை என்பன வெள்ளப்பெருக்கு அபாயத்துக்கு உட்பட்டவையாக கருதப்படுகின்றன.


மகாவலி ஆறு அல்லது மகாவலி கங்கை இலங்கையில் உள்ள ஆறாகும். இது பீதுறுதாலகால இருந்து ஊற்றெடுத்து திருகோணமலையில் கடலில் சேர்கின்றது இது இலங்கையின் மிக நீளமான ஆறாகும், மேலும் நீரோட்டத்தின் படி முதலாவது பெரிய ஆறும் ஆகும். இந்த ஆற்று நீரைப் பயன்படுத்தி வேளாண்மையும் நீர்மின் உற்பத்தியும் பெருமளவில் நடைபெறுகிறது. சுமார் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலம் இவ்வாற்று நீரின் மூலம் பயிரிடப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. மகாவலி கங்கை என்பது சிங்கள மொழியில் மணற்பாங்கான பெரும் ஆறு  எனப் பொருள் தரும். இதன் நீரேந்து பகுதியில்  சராசரியாக ஆண்டுக்கு  22282 மில்லியன் கனமீட்டர் மழை  பெய்கிறது, இதில் சுமார் 40 சதவீதமான நீர்  கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 10237 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் முதலாவது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.


இலங்கையின் முக்கிய நீர்மின் திட்டங்கள் மகாவலியை மறித்துக் கட்டப்பட்ட அணைகள் மூலமே செயற்படுத்தப்படுகின்றன. இவற்றில் முக்கிய நீர்மின் திட்டங்கள்:



மேல் கொத்மலை நீர் மின் திட்டம்

கொத்மலை நீர் மின் திட்டம்

உக்குவளை நீர் மின் திட்டம்

விக்டோரியா நீர் மின் திட்டம்

இரந்தெனிகலை நீர் மின் திட்டம்

இரந்தம்பை நீர் மின் திட்டம்

போவதன்னை நீர் மின் திட்டம்

உக்குவளை நீர் மின் திட்டம்


இவற்றுக்கு மேலதிகமாக பல நீர்பாசனத் திட்டங்களும் அவற்றில் அமைக்கப்பட்டுள்ளன:


மினிப்பே

பொல்கொல்லை

உல்கிட்டிய / ரக்கிந்தை

மாதுரு ஓயா


இலங்கையின் பிரதான ஆறுகள்


1. களனி கங்கை

2. களுகங்கை

3. பெந்தோட்ட கங்கை

4. ஐpன் கங்கை

5. நில்வளா கங்கை

6. வளவ கங்கை

7. கிரிந்தி ஓயா

8. மாணிக்க கங்கை

9. கும்புக்கன் ஒயா

10. வில் ஓயா

11. கரந்த ஓயா

12. கல் ஓயா

13. மஹலவட்டன் ஆறு

14. முந்தெனி ஆறு

15. மாதுரு ஓயா

16. மாகவலி கங்கை

17. பான்குளம் ஆறு

18. யான் ஆறு

19. மா ஓயா

20. கனகராயன் ஆறு

21. மண்டேகல் ஆறு

22. பரங்கி ஆறு

23. அருவி ஆறு

24. மோதரகம் ஆறு

25. கலா ஓயா

26. மீ ஓயா

27. தெதுரு ஓயா

28. மாக ஓயா

29. மல்வத்து ஓயா

30. ஹேட ஓயா


இன்னும் பல மேலதிக விடயங்களை தெரிந்து கொள்ள கிழே தரப்பட்டுள்ள  LINK ஐ CLICK செய்யவும்.

PDF Available