ஒத்தகருத்துச் சொற்கள்
• ஒரே பொருளைத் தரும் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் ஒத்தகருத்துச் சொற்கள் எனப்படும்.
அந்தவகையில் ஒத்தகருத்துச் சொற்கள் சில வருமாறு
அகர வரிசையில் உள்ள ஒத்தகருத்துச் சொற்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
அ
1. அரசன் - மன்னன்
2. அகம் - உள்ளம்
3. அக்கறை - ஆர்வம்
4. அக்கிரமம் - அநியாயம்
5. அகங்கை - உள்ளங்கை
6. அகதி - கதியற்றவன்
7. அங்காடி - சந்தை
8. அங்கு - அவ்விடம்
9. அச்சம் - பயம்
10. அஞ்சலி - வணக்கம்
11. அடவி - காடு
12. அச்சன் - தந்தை
13. அடிசில் - உணவு
14. அடியிடல் - தொடங்குதல்
15. அடைதல் - சேர்தல்
16. அண்ணம் - மேல்வாய்
17. அன்னம் - உணவு
18. அண்மை - சமீபம்
19. அணங்கு - அழகு , பெண், தெய்வமகள்
20. அணை- வரம்பு
21. அண்ணல் - சிறந்தோர், தலவர்
22. அதரம் - உதடு
23. அத்தனையும் - யாவும்
24. அத்தி - எலும்பு, ஒருவகை மரம்
25. அந்தம் - முடிவு
26. அந்திநேரம் - மாலைநேரம்
27. அபயம் - அடைக்கலம்
28. அகங்காரம் - ஆணவம்,செருக்கு, அகந்தை
29. அக்கரம் - எழுத்து
30. அக்கினி - நெருப்பு
31. அங்கத்துவம் - உறுப்புரிமை
32. அகண்டம் - முழுமை
33. அகம்பாவம் - தற்பெருமை
34. அச்சாரம் - முன்பணம்
35. அசுவம் - குதிரை
36. அஞ்சுதல் - பயப்படுதல்
37. அடர்த்தி - செறிவு
38. அச்சாணி - சக்கரக் காப்பாணி
39. அடிமை - தொண்டன்
40. அடையாளம் - சின்னம்
41. அடைக்கலம் - தஞ்சம்
42. அணிகலன் - ஆபரணம்
43. அனல் - தீ , சூடு
44. அண்டம் - உலகம்
45. அதிதி - விருந்தினர்
46. அதர் - வழி
47. அத்தை - மாமி
48. அபசாரம் - குற்றம்
49. அந்தரங்கம் - இரகசியம்
50. அவதாரம் - திவ்யபிறப்பு
51. அன்பு - நேசம்
52. அற்புதம் - அதிசயம்
53. அஞ்சல்தலை - முத்திரை
54. அல் - இரவு
55. அந்நியர் - பகைவர்
56. அநீதி - அநியாயம்
57. அழகு - வடிவு
58. அழைத்தல் - கூப்பிடுதல்
59. அறிதல் - தெரிதல்
60. அரண் - கோட்டை
61. அரன் - சிவன்
62. அறிவியல் - விஞ்ஞானம்
63. அலகு - சொண்டு
64. அளகு - பெட்டைக்கோழி
65. அளி - கொடு, வண்டு
66. அலி - பேடி
67. அளித்தல் - கொடுத்தல்
68. அழித்தல் - இல்லாமல் செய்தல்
69. அலை - திரை
70. அளை - புற்று
71. அழை - கூப்பிடு
72. அல்லல் - துன்பம்
73. அவி - தேவர் உணவு
74. அழி பசி - மிகுந்த பசி
75. அபாயம் - ஆபத்து
76. அனுமதி - உத்தரவு
77. அறம் - தருமம்
78. அமைச்சர் - மந்திரிமார்
79. அலங்கரித்தல் - அழகுபடுத்தல்
80. அரசிறை - வரி
81. அறிஞர் - சான்றோர்
82. அடி - பாதம்
83. அரி - சிங்கம்
84. அசைதல் - ஆடல்
85. அந்தணர் - மறையவர்
86. அறிவு - ஞானம்
87. அரவம் - பாம்பு ,சத்தம்
88. அலர் - பூ
89. அம்பலம் - சபை
90. அம்பு பாணம்
91. அத்திரம் - கணை
92. அனங்கன் - காமன்
93. அரி - பரி
94. அமர் - யுத்தம்
95. அழல் - நெருப்பு
96. அவனி - உலகம்
97. அமுது - உணவு
98. அயன் - பிரமன்
99. அரங்கம் - நாடக சாலை
100. அருள் - இரக்கம்
101. அரற்றல் - அழுதல்
102. அவா - விருப்பம்
103. அரவம் - ஒலி
104. அருகுதல் - குறைதல்
105. அளகம் - கூந்தல்
106. அம்புலி - சந்திரன்
107. அண்ணன் தமைமன்
108. அனந்தல் - நித்திரை
109. அம்புயம் - தாமரை
110. அப்பு - நீர்
111. அருந்துதல் - உண்ணல்
112. அகிலம் - பூமி
113. அரிவை - பெண்
114. அந்தகன்- எமன்
115. அறவர் - முனிவர்
116. அசலம் - மலை
117. அயர்வு - சோர்வு
118. அகற்றுதல் - நீக்குதல்
ஆ
119. ஆசனம் - இருக்கை
120. ஆணை - கட்டளை
121. ஆதிக்கம் - முதன்மை
122. ஆவி - உயிர்
123. ஆகாயம் - விசும்பு
124. ஆயர் - கோவலர்
125. ஆடி - கண்ணாடி ,ஒரு மாதம்
126. ஆடல் - அசைதல்
127. ஆறு - நதி, வழி
128. ஆனந்தம் - மகிழ்ச்சி
129. ஆபரணம் - நகை
130. ஆழி - கடல்
131. ஆளி - யானை
132. ஆலி - அமுதம்
133. ஆரம்பம் - தொடக்கம்
134. ஆற்றல் - வலிமை
135. ஆலம் - நஞ்சு
136. ஆழம் - தாழ்வு
137. ஆல் - ஆலமரம்
138. ஆள் - ஆட்சி செய்
139. ஆழ்வார் - விஷ்ணு பக்தர்
140. ஆள்வார் - ஆளுவோர்
141. ஆசிரியர் - குரு
142. ஆனி - மாதப் பெயர்
143. ஆரவாரம் - சத்தம்
144. ஆயத்தம் - ஏற்பாடு
145. ஆபத்து - அபாயம்
146. ஆதி - ஆரம்பம், தொடக்கம்
147. ஆசை - விருப்பம்
148. ஆடை - உடை
149. ஆசாரம் - ஒழுக்கம்
150. ஆரணம் - வேதம்
151. ஆணி- இரும்பு ஆணி
152. ஆர- நிறைய
153. ஆணம் - குழம்பு
154. ஆனம்- தெப்பம்
155. ஆலல் - ஆடல்
156. ஆசு - குற்றம்
157. ஆனை - யானை
158. ஆண் - ஆண்மை
159. ஆன்- பசு
160. ஆ- பசு
161. ஆசான் - குரு
162. ஆகாரம்- உணவு
163. ஆரணியம் -காடு
164. ஆர்ப்பு - ஒலி
165. ஆசாடபூதி - மோகக்காரன்
166. ஆசி- வாழ்த்து
167. ஆடகம்- பொன்
168. ஆயுதம் -கருவி
169. ஆசீர்வாதம் -வாழ்த்து
170. ஆடவன் -ஆண்மகன்
171. ஆட்கொள்ளல்- அடிமையாதல்
172. ஆட்சேபம் -மறுப்பு
173. ஆணவம் -செருக்கு
174. ஆணித்தரம் -உறுதி
175. ஆணை -சத்தியம்
176. ஆண்டகை -சிறந்தோன்
177. ஆண்டு -வருடம்
178. ஆதவன் - சூரியன்
179. ஆதாரம் -பற்றுக்கோடு
180. ஆதிகாலம் - முற்காலம்
181. ஆமோதித்தல் உடன்படல்
182. ஆயன் -இடையன்
183. ஆயுள் -வாழ்நாள்
184. ஆரம்- மாலை
185. ஆரவாரம் -பேரொலி
186. ஆராதனை -வணக்கம்
187. ஆரோக்கியம் -நோயின்மை
188. ஆர்வம் -விருப்பம்
189. ஆலம் - விடம்
190. ஆவணம் - பதிவேடு
191. ஆவி -உயிர்
192. ஆவேசம் -சன்னதம்
193. ஆற்றாமை -பொறுக்க இயலாமை
இ
194. இகல் -பகை
195. இகழ்ச்சி -அவமதிப்பு
196. இங்கிதம் -இனிமை ,நோக்கம்
197. இசை -சங்கீதம்
198. இச்சை- விருப்பம்
199. இடுகாடு -சுடுகாடு
200. இணக்கம் - உடன்பாடு
201. இடுக்கண் -துன்பம்
202. இணைதல் -சேர்தல்
203. இனைதல் -வருந்துதல்
204. இளை - களைப்படை
205. இழை - அணிகலம்
206. இறுமாப்பு -செருக்கு
207. இன்னல் -துன்பம்
208. இறை- கடவுள்
209. இலை -தழை
210. இழி - நிந்தி
211. இரை- உணவு
212. இரங்கல் -உருகல்
213. இறங்கல் - கீழ் வருதல்
214. இரவி -சூரியன்
215. இறும்பு -இள மரக்காடு
216. இணை- ஒத்து இருத்தல்
217. இதழ் -உதடு
218. இம்மை -இப்பிறப்பு
219. இயந்திரம் -பொறி
220. இயமன் - கூற்றுவன்
221. இரண்டகம் -துரோகம்
222. இரதம் - தேர்
223. இரத்தம் -குருதி
224. இரம்மியம் -மனநிறைவு
225. இரவலர் -பிச்சை எடுப்போர்
226. இராசதானி -தலைநகர்
227. இலகு -எளிது
228. இலக்கம் -எண்
229. இலக்கு -குறிக்கோள்
230. இலக்குமி -திருமகள்
231. இலட்சிணை -அடையாளம்
232. இலஞ்சம் -கையூட்டு
233. இலட்சணம் -இலக்கணம்
234. இலட்சியம் -குறி
235. இலம்பாடு -வறுமை
236. இலாவணியம் -அழகு
237. இலிங்கம் -அடையாளம்
238. இலௌகீகம்- உலக சம்பந்தம்
239. இல் -வீடு
240. இளமை -முருகு
241. இறுதி -முடிவு
242. இறைச்சி - ஊன்
243. இறைமை -தலைமை
244. இறைவன் -கடவுள்
245. இன்பம் -ஆனந்தம்
246. இன்னல் -துன்பம்
247. இன்னார் -பகைவர்
248. இனியார் -நண்பர்
249. இரக்கம் -மன உருக்கம்
250. இறக்கம் -சரிவு
251. இருத்தல் -அமர்ந்திருத்தல்
252. இறுத்தல் - செலுத்துதல்
253. இலவு -பஞ்சு
254. இழவு -மரணம்
ஈ
255. ஈகை - கொடை
256. ஈசன் -கடவுள்
257. ஈடுபாடு -விருப்பம்
258. ஈடேறுதல்- உய்வடைதல்
259. ஈதல்- கொடுத்தல்
260. ஈழம் -இலங்கை
261. ஈறு- முடிவு
உ
262. உடம்பு -தேகம், காயம்
263. உண்ணுதல் -அருந்துதல்
264. உன்னுதல் -நினைத்தல்
265. உலவு -உலவுதல்
266. உழவு -பயிர்த்தொழில்
267. உரி -தோல்
268. உறி- பொருள் வைக்கும் உறி
269. உறக்கம் -நித்திரை
270. உவகை -ஆனந்தம்
271. உளி - ஒரு கருவி
272. உளை -வருத்து
273. உரப்பு -அதட்டு
274. உரவு - வலிமை
275. உறவு - சுற்றம்
276. உரஞ்சுதல் -தேய்த்தல்
277. உறிஞ்சு- உள்ளே உள்ளே ஈவு
278. உறுக்கல்- அதட்டல்
279. உடு -நட்சத்திரம்
280. உடுக்கை -ஆடை
281. உடைமை -செல்வம்
282. உட்கிடக்கை -மனக்கருத்து
283. உண்டி -உணவு
284. உதரம் -வயிறு
285. உதிரம் -இரத்தம்
286. உதாசீனம் -அலட்சியம்
287. உதாரணம் - மேற்கோள்
288. உத்தரவு -கட்டளை
289. உபகாரம்- உதவி
290. உபதேசம் -போதித்தல்
291. உபவாசம் -நோன்பு
292. உபாயம் -தந்திரம்
293. உமிழ்தல் -துப்புதல்
294. உம்பர் -தேவர்
295. உயில் -மரண சாசனம்
296. உய்தி -ஈடேற்றம்
297. உருளி- சில்லு
298. உரோமம் -மயிர்
299. உலா -பவனி
300. உவரி -கடல்
301. உழுபடை -கலப்பை
302. உள்ளம் -மனம்
303. உற்சவம் -திருவிழா
304. உதயம் -புலரி ,வைகறை
305. உண்மை -சத்தியம்
ஊ
306. ஊறு- இடையூறு
307. ஊக்கம் -முயற்சி
308. ஊண்- உணவு
309. ஊதியம் -சம்பளம்
310. ஊர் -கிராமம்
311. ஊர்தி -வாகனம்
312. ஊழி- உலக முடிவு
313. ஊழியம் - தொண்டு
314. ஊழ்- விதி
எ
315. எருது -இடபம்
316. எண்- இலக்கம்
317. என் -என்னுடைய
318. எரி -நெருப்பு
319. எறி -வீசு
320. எச்சரிக்கை -முன்னறிவிப்பு
321. எச்சில் -உமிழ்நீர்
322. எண்ணம் -நினைப்பு
323. எயிறு -பல்
324. எழில் -அழகு
325. எழுச்சி- கிளர்ச்சி
326. எள்ளல் - இகழ்ச்சி
327. எயில் - வேலி, அரண்
ஏ
328. ஏகம் -ஒன்று
329. ஏகாந்தம் -தனிமை
330. ஏதிலார் -பகைவர்
331. ஏது -காரணம்
332. ஏந்திழை- பெண்
333. ஏமம் -பாதுகாப்பு
334. ஏரி- நீர் நிலை
335. ஏளனம் -இகழ்ச்சி
336. ஏறு- எருது
337. ஏற்றம் -உயர்வு
338. ஏற்பாடு -ஒழுங்கு
ஐ
339. ஐக்கியம் -ஒற்றுமை
340. ஐங்கரன் -விநாயகர்
341. ஐஸ்வரியம்- செல்வம்
342. ஐயப்பாடு -சந்தேகம்
ஒ
343. ஒறு- தண்டி
344. ஒத்தாசை - உதவி
345. ஒப்பந்தம் - உடன்படிக்கை
346. ஒலி- சத்தம் ,ஓசை
347. ஒழி -முடித்துவிடு
348. ஒளி -பிரகாசம்
349. ஒப்பனை - அலங்கரித்தல்
350. ஒப்பம் -கையொப்பம்
351. ஒப்புரவு -உலக ஒழுக்கம்
352. ஒய்யாரம் -ஆடம்பரம்
353. ஒழுக்கம் -நடத்தை
354. ஒற்றர்- தூதர்
ஓ
355. ஓம்படை -பாதுகாப்பு
356. ஓலக்கம் - சபா மண்டபம்
ஒள
357. ஒளடதம்- மருந்து
358. ஒளவியம்- பொறாமை
0 Comments