ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பதுபோல ஒவ்வொரு ஆண்டுமுடிவிலும் அதை சிறப்பிக்க ஒரு பெயர்வைத்து விழா கொண்டாடுவது வழக்கம். அந்த விழாக்களின்பெயர்கள் பற்றி இங்கு விரிவாகக் காணலாம்.


பொதுவாக நம்மில் பலரும் அறிந்தது வெள்ளிவிழா, பொன் விழா, வைர விழா, மணி விழா அல்லது சதாபிஷேகம், அஷ்டாபிஷேகம், தசாபிஷேகம் என்ற வைபவங்கள்.


25 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 60 ஆண்டுகள் என கால நிறைவுக்கு ஏற்ப இந்தத் தருணங்களை வகைப்படுத்தி பெயரிட்டு விழா எடுக்கின்றோம்.


ஆனால் ஒவ்வொரு ஆண்டுக்குமே ஒரு விழாவின் சிறப்பு உண்டு என்பதை நம்மில் பலரும் அறிந்ததில்லை.

அவர்களுக்காகவே இந்த விவரங்களை கீழே காணலாம்:


1 ஆண்டு நிறைவு - காகித விழா (Paper jubilee)


2 ஆண்டு நிறைவு - பருத்தி விழா (Cotton jubilee)


3 ஆண்டு நிறைவு - தோல் விழா (Leather jubilee)


4 ஆண்டு நிறைவு - மலர் மற்றும் பழ விழா (Flower and Fruit jubilee)


5 ஆண்டு நிறைவு - மர விழா (Wood jubilee)


6 ஆண்டு நிறைவு - சர்க்கரை விழா (Sugar jubilee)


7 ஆண்டு நிறைவு - செம்பு விழா (Copper jubilee)


8 ஆண்டு நிறைவு - வெண்கல விழா (Bronze jubilee)


9 ஆண்டு நிறைவு - மண்கலச விழா (Mud Bowl jubilee)


10 ஆண்டு நிறைவு - தகரம் விழா (Tin jubilee)


11 ஆண்டு நிறைவு - எஃகு விழா (Steel jubilee)


12 ஆண்டு நிறைவு - பட்டு விழா (Silk jubilee)


13 ஆண்டு நிறைவு - பின்னல் விழா (Lace jubilee)14 ஆண்டு நிறைவு - தந்தம் விழா (Ivory jubilee)


15 ஆண்டு நிறைவு - ஸ்படிக விழா (Crystal jubilee)


17 ஆண்டு நிறைவு - டர்க்கைஸ் விழா (Turquoise jubilee)


18 ஆண்டு நிறைவு - லேபிஸ் விழா (Lapis jubilee)


20 ஆண்டு நிறைவு - சீனக்களிமண் விழா (China clay jubilee)


25 ஆண்டு நிறைவு - வெள்ளி விழா (Silver jubilee)


30 ஆண்டு நிறைவு - முத்து விழா (Pearl jubilee)


40 ஆண்டு நிறைவு - மாணிக்க விழா (Ruby jubilee)


45 ஆண்டு நிறைவு - ரத்தின விழா (Sapphire jubilee)


50 ஆண்டு நிறைவு - பொன் விழா ( Golden jubilee)


55 ஆண்டு நிறைவு - மரகத விழா (Emerald jubilee)


60 ஆண்டு நிறைவு - வைர/ மணி விழா ( Diamond jubilee)


65 ஆண்டு நிறைவு - நீல சபையர் விழா (Blue sapphire jubilee)


70 ஆண்டு நிறைவு - பிளாட்டினம் விழா (Platinum jubilee)


75 ஆண்டு நிறைவு - பவள விழா (coral jubilee)


80 ஆண்டு நிறைவு - அமுத விழா (Elixir jubilee)


100 ஆண்டு நிறைவு - நூற்றாண்டு விழா (Centenary)